• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிள்ளையாருக்கு கோவில் கட்டிய இஸ்லாமியர்…

Byகாயத்ரி

Apr 8, 2022

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் பிரச்சனை, கோவில்களில் முஸ்லிம்கள் கடை வைக்க எதிர்ப்பு, ஹலால் உணவுக்கு எதிர்ப்பு என தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதற்கு மத்தியில் கர்நாடகத்தில் முஸ்லிம் ஒருவர் விநாயகருக்கு கோவில் கட்டி பூஜை நடத்தும் சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் சிக்கஒலே மற்றும் சுவர்ணாவதி அணைகட்டுகள் உள்ளது. இங்கு அணை மதகுகளை திறக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பி.ரகுமான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சிக்கஒலே அணை பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதை அறிந்த ரகுமான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் விநாயகர் சிலை நிறுவி கோவில் கட்டினார். அத்துடன் விநாயகருக்கு பூஜை செய்ய பூசாரியும் நியமித்தார். அதன்படி விநாயகருக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடத்தப்பட்டது வருகிறது. இந்த பூஜையில் ரகுமான் கலந்துகொண்டு சாமி தரிசனம் சய்து வருகிறார். இதுகுறித்து ரகுமான் கூறுகையில், ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் விருப்ப தெய்வங்களை வழிபடுகிறார்கள்.
ஆனால் இறைவன் என்பவன் ஒருவனே. அனைவருக்கும் சிவப்பு நிறத்தில் தான் ரத்தம் ஓடுகிறது. இறைவன் ஒருவனே அதனால் விநாயகரையும் நான் வழிபடுகிறேன் என்றார்.