• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்

இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!
ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று இவர், தனது ஆராய்ச்சிக்காக இந்தியா திரும்பியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஜெகதளா கிராமத்தை சேர்ந்தவர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவுடன் ஆஸ்திரேலியாவில் தகவல் அமைப்பு மேலாண்மையில் மேற்படிப்பும் எம்.பி.ஏ-வும் முடித்து அங்கேயே தொழில் தொடங்கியுள்ளார். தன்னுடைய ஆய்வுகளை உலக அறிவியலாளர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்.
இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் இயற்பியல் கோட்பாட்டில் புவிஈர்ப்பு எதிர் விசை குறித்து
ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் ஆகியோரது கருத்து சரியானது அல்ல தவறு.இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்

.இந்நிலையில் நம்மிடம் பேசிய கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன்,
என்னுடைய ஆய்வு அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் என்றதோடு, பூமி ஏன் சுழல்கிறது? அணுவிற்கு ஏன் வரையறை இல்லை? என்பன உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. என்னுடைய மாடல் “சூப்பர் ஸ்டேண்டேர்டு மாடல்” இது இயற்பியல் தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்கிறது. இது ஒரு சிங்கிள் தியரி இதன்மூலம் நமது சமுதாயத்திற்கு அறிவியலை கொண்டு சேர்த்திடலாம். இதற்காக இயற்பியல் நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் கொடுத்துள்ளேன்.. 5 நிமிடம் முதல்வரிடம் பேச வாய்ப்பு கிடைத்தால் எனது ஆராய்ச்சிகள் குறித்து எடுத்து சொல்லிவிடுவேன். இந்நிலையில் கர்நாடக முதல்வருக்கு மத்திய அரசு தரப்பில் கடிதம் கொடுத்துள்ளார்கள் தற்போது அங்கு தேர்தல் அறிவித்துள்ளதால், அங்கும் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வரின் சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்” என்றார்.