• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சி தலைவர் செய்த காரியமா இது

ByI.Sekar

Mar 21, 2024

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் விவசாய நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குபேந்திரன் உள்ளிட்டவர்கள் நில உரிமையாளரை உயிருடன் புதைக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பேரூராட்சி, பகுதியில் ஜெகநாதன், மனைவி கிரிஜா மல்லிகா, மகள் ஜெகதா மணி, மகன் கார்த்திகேயன், இளைய மகள் சிவரஞ்சனி, உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான நிலம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 25 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை பழனி செட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளை அழித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குபேந்திரன் உள்ளிட்டவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஏதுவாக தனி நபர் நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலத்தை அகற்ற தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் கிரிஜா மல்லிகா வழக்கு தொடர்ந்து மூன்று முறை நீதிமன்றத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலத்தை அகற்ற உத்தரவு பெற்றுள்ளார்.

நில உரிமையாளரின் நிலத்தை மீட்க மூன்று முறை சென்றும் நிலத்தை மீட்க முடியவில்லை.

இன்று நில உரிமையாளர் நிலத்தை மீட்க சென்ற போது நில உரிமையாளரை உயிருடன் புதைக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து உடனடியாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ. ஜீவனாவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.