தமிழ் சினிமாவில் கோலிவுட், பாலிவுட் ,ஹாலிவுட் என்று கலக்கி வருபவர், தனுஷ்! இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது.
அம்பிகாபதி திரைப்படத்திற்கு பின்னர் பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அற்றங்கி ரே திரைப்படம் வெளியானது. வித்தியாசமான காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக சிம்பு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்தகைய நிலையில் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து செய்து கொள்வதாக அவர் அறிவித்திருந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் மூத்த மகன் யாத்திரா சமீபத்தில், தனுஷை சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து எதற்காக தந்தையை சந்தித்தார் என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் போலவே இருக்கும் யாத்திரா மேல் தனுஷுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. எனவே ரஜினியின் சிபாரிசின் பேரில் யாத்ரா தனுஷிடம் இருவரும் சேர்ந்து வாழுமாறு பக்குவமாக பேசியுள்ளார். அனைவரிடமும் விடாப்பிடியாக மறுத்த தனுஷ் மகனிடம் அப்படி கூற முடியாமல் யோசித்து சொல்கிறேன் என்று கொஞ்சம் நிதானமாக இருக்கிறாராம். இவர்களின் சந்திப்புக்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.











; ?>)
; ?>)
; ?>)