• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விஜயின் வாரிசு படத்திற்கு இப்படிஒரு சிக்கலா?..அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

Nov 30, 2022

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் வாரிசு திரைப்படம் புதிய சிக்கலில் சிக்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த படத்திற்கு அதிகம் தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் ரிலீஸ் தேதியும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால் தற்போது பல உறுதிப்படுத்தாத தகவல்கள் உலா வருகின்றன.
துணிவு ஜனவரி 12 ரிலீஸ் ஆனால், வாரிசு ஜனவரி 11ம் தேதி அல்லது 13ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து இருக்கிறார். .
மேலும் இரண்டு படங்களுக்கும் சம அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என அவர் கூறி இருக்கிறார். நன்றாக இருக்கும் படம் தான் நல்ல வசூல் ஈட்ட போகிறது, ரிலீஸ் முன்னரா பின்னரா என்பது பிரச்சனை இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.ஏற்கனவே அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் உரிமையை மூன்று முக்கிய ஏரியாக்களில் உதயநிதி வாங்கி இருக்கிறாராம். சிட்டி, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் செய்கிறது என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் துணிவு படத்தின் வியாபாரம் விறுவிறுவென நடந்து முடிய திரையரங்குகளும் அதிகம் பிடித்துவிட்டது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் சமீபத்தில் நடக்க திரையரங்குகள் மிகவும் குறைவாக பிடித்துள்ளது.சென்னையை அடுத்து வசூலில் முக்கிய இடமாக கருதப்படும் திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவில் மிக குறைந்த திரையரங்குகளை வாரிசு பெற்றுள்ளதாம். 45 ஸ்கிரீன்களை வாரிசு பிடிக்க அஜித்தின் துணிவு 60 ஸ்கிரீன்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.இத்தகவல் விஜய் ரசிகர்களை ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.