• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாரிசு படப்படிப்பிற்கு தடையா..?? என்ன விஷயம்…

ByA.Tamilselvan

Aug 1, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஆந்திரா – தெலுங்கானாவில் சினிமா தொழில் நுட்பக் கலைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விஜய்யின் வாரிசு, அஜித்தின் ‘அஜித்61’ படத்திற்கு சிக்கல் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டிணத்தில் வாரிசு பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. மேலும், தெலுங்கு சினிமா கலைஞர்கள் போராட்டம் என்பது, தெலுங்கு சினிமா ஷுட்டிங்கிற்குத்தான் என்றும், இது மற்ற மொழிப்படங்களுக்கு பாதிப்பு இருக்காது எனக் கூறப்பட்டுள்ளதால், வாரிசு பட ஷூட்டிங் தடையின்றிச் சுமூகமாக நடந்து வருகிறது.