• Fri. May 10th, 2024

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைக்கின்றதா? எம்பி விஜய் வசந்த் கண்டன கோஷம்…

கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சிதைக்கின்ற வகையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மத்திய பாசிச பாஜக அரசு கண்டிக்கின்ற வகையிலே அன்னை சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் வருங்கால பாரத பிரதமர் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்பி, ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே. எஸ்.அழகிரி ஆலோசனையின் பேரில் அனைத்து மாவட்டங்களில் தேசிய வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *