

புதுச்சேரியில் தமிழ் மொழிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதுச்.சேரியை ஆளும் பிஜேபி- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாக திமுக மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் லாஸ்பேட்டையில் செயல்படும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன கட்டடத்தை வேறு துறையிடம் ஒப்படைக்கஅதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மொழியியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு முழு நேர இயக்குனரையும், பேராசிரியர்களையும் நியமிக்க வேண்டும், தமிழுக்கு எதிராக செயல்பட்டு வரும் கலை பண்பாட்டுத்துறை செயலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள 30 தமிழ், இலக்கிய அமைப்புகளை ஒன்றிணைத்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்பு குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பிலும், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் சார்பில் சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு குழு தலைவர் வேல்முருகன் தலைமை வகித்திட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான சிவா பேசுகையில்,..
முதல்வர் ரங்கசாமி தமிழர்களுக்கான ஆட்சியை நடத்துகிறாரா..? அவரது முகம் தமிழர்களின் முகமா..?பாஜக முகமா…? தமிழ் மொழியை அழிக்கும் முகமா..?உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,..
சமஸ்கிருத மொழிக்கு 2350 கோடியும் இந்திக்கு 1488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இரண்டாடே கால் கோடியில் இயங்கிய மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட முயற்சிப்பது கண்டிக்க தக்கது.
முதல்வர் ரங்கசாமி மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.மீறினால் தமிழுக்கு செய்யும் துரோகம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

