• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் நடப்பது திமுக ஆட்சியா? அதிமுக ஆட்சியா? போஸ்டரால் பெரும் பரபரப்பு

ByA.Tamilselvan

May 16, 2022

மதுரையில் திருமங்கலத்தில் “மதுரையில் நடப்பது திமுக ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரையில் போஸ்டர் கலாச்சாரம் வழக்கமான ஒன்றுதான்.அதிலும் போஸ்டர் மூலமாக நடத்தப்படும் அரசியல் யுத்தம் என்பது தினம்தினம் நிகழ்வதுதான்.ஒரு அரசியல் கட்சி ஒட்டுகிற போஸ்டருக்கு பதில் போஸ்டர் அதற்கு பதில் அளிக்கும் விதமாக போஸ்டர் அதற்கு பதில் போஸ்டர் என போஸ்டரில் அரசியல் நடப்பதுண்டு.
இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் அதில் உள்ள தலைப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் நடப்பது திமுக ஆட்சியா? அதிமுக ஆட்சியா? என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள து போஸ்டர். தலைப்பிற்கு கீழ் உள்ள தகவல்கள் பல அதிர்ச்சிகளை கொண்டுள்ளது.போஸ்டரில் உள்ள தகல்கள் …மதுரை மாவட்டம் திருமங்கல்த்தில் வட்ட வழங்கல் அலுவலராக உள்ள வீரமுருகன் என்பவர் முழுக்க அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவரது கைகூலியாக செயல்பட்டுவருகிறார்.
திருமங்கலம் வட்டத்தில் உள்ள கூட்டுறவு பணியாளர்களை மிரட்டி மாமூல் வசூல் மற்றும் அதே போல் அரிசி கடத்தும் 5 வேன்களை பிடித்தால் நான்கு வண்டிகளுக்கு மாமுல் வாங்கி கொண்டு பெயருக்கு ஒரு வாகனத்தை காவல்துறை வசம் ஒப்படைக்கிறார்.
இதை காட்டிலும் கொடுமை என்ன வென்றால் எந்த பணியாளர் என்றாலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னால்போதும் உடனே அந்த பணியாளர் மீது ஏதாவது ஒருவகையில் அபதாரம் விதித்து ஆட்டும்போடும் டிஎஸ்ஒ.வீரமுருகன் மீதுதக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் “
மாவட்ட தி.மு.கவினரோ அல்லது தமிழக அரசோ இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?