• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பகலில் தூங்குறது இவ்ளோ ஆபத்தா?

தூங்குறதுனால உடலுக்கு ஓய்வு கிடைச்சு சோர்வு நீங்கும். சிலருக்கு படுத்தவுடனே தூக்கம் கண்களை தழுவும். இன்னும் சிலர் இருக்காங்க! தூக்கம் வர்ரதுக்குள்ள 100 வாட்டி புரண்டு புரண்டு படுப்பாங்க!
இன்னும் சிலர் இருக்காங்க! தலைகீழாக நின்று குட்டிகரணம் அடிச்சாலும் தூக்கம் வருவது பெரிய பாடாவே இருக்கும். இதெல்லாம் காலத்தின் கொடுமை!

தூக்கத்தின் நிலையை மூன்றாக பிரிச்சு வைச்சிருக்காங்க! ஒன்னு மந்தமான தூக்கம். சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவாங்க! இரண்டாவது கும்பகர்ணன் தூக்கம்! இடியே விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விழிப்பு வராது. இவர்களை தட்டி உலுக்கி எழுப்பினாலும் அந்த கலக்கத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடிக்கும். மூன்றாவது நிலை தூக்கமானது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் நீங்கள் எந்த ரகம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.

தினமும் வாடிக்கையா அதிக நேரம் பகல் தூக்கம் அப்டிங்குறது உடல் ஆரோக்கியத்தக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயம். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும்போது திடீர்ன்னு உடலுக்கு ஓய்வு குடுக்கும்போது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

இதைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் என்ன சொல்லிருக்காங்கன்னா! மத்தவங்கள விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுறாங்க அப்டின்னு! பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அப்டின்னும் சொல்லி இருக்காங்க!

இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருக்குறவங்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் வராதாம்! மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடும். இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பகல்ல அதிக நேரம் தூங்குறவங்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது கிடையாது. இப்படி மாறுபட்ட முறையில தூக்கம் வரும்போது உடல் ரீதியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!அதனால ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைச்சிக்கிறது ரொம்ப முக்கியம்! குறிப்பாக 45 வயதை கடந்தவங்க பகல்ல அதிக நேரம் தூங்குறத குறைக்கிறது ஆரோக்கியத்திற்கு நல்லது.