புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஆறு நபர்களை போலிஸ் தனிபடையினர் அதிரடியாக கைது செய்தனர்
புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் எஸ்ஐ பரத்லிங்கம், முத்துகிருஷ்ணன் ,காவலர்கள் சந்தனபாண்டி ,வேலுசாமி, மாரியப்பன் செந்தில் குமார், குட்டிராஜா தனிபிரிவு காவலர் மருது பாண்டி ஆகியோர் அடங்கிய தனிபடையினர் நேற்று காலை கொல்லம் -மதுரை மெயின் ரோட்டில் சிந்தாமணி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்த ஆறு நபர்களை விசாரிக்கும் போது அவர்கள் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியங்குடி பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் புளியங்குடி செல்வா விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உலகநாதன் மகன் சிவசுப்பிரமணியன் ஜ19 ஸ ,சங்கரன் கோவில் மலையன் குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் கபில் குமார் (20) ,சங்கரன் கோவில் முஸ்லிம் முதல் தெருவை சேர்ந்த சலீம் மகன் முஹமது அலி (22) ,சங்கரன் கோவில் காந்தி நகர் சேர்ந்த சண்முகராஜ் மகன் காளிராஜ் (19) ,சங்கரன் கோவில் காய்தேமில்லத் தெருவை சேர்ந்த பாதுஷா மகன் ஷெரிப் (20) புளியங்குடி பால விநாயகர் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்ட ரவி (23) என்பது தெரிய வந்தது உடனடியாக அவர்கள் ஆறு பெரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 1.600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
படம் : புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்களை போலீசார் கைது செய்தனர்.