• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கரூரில் த வெ க கூட்டம் என்றாலே அபசகுணமா ? த வெ க கூட்டத்தில் திடீர் மழை !

ByAnandakumar

Feb 26, 2026

கரூரில் தவெக கூட்டம் நடைபெற்றபோது, மழை பெய்த்து நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருப்பது திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மண்டையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலை பகுதியில் நடைபெற்றது.

இதில், கொள்கை பரப்புரைச் செயலாளர் நாஞ்சில்சம்பத், துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன், ஆகியோர் பேசினர்.

இக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச ஆரம்பித்தபோது திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது மழையையும் பொருட்படுத்தாது அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் மழையின் காரணமாக பலர் தலையில் சேரை வைத்து கொண்டு உட்கார்ந்து இருந்த நிலையில் பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் ஆட்கள் இல்லாமல் காலியாக காணப்பட்டது.

அப்பொழுது மேடையில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது மேடை ஓரமாக இருந்த போக்கஸ் லைட் விளக்கில் புகை மற்றும் நெருப்பு வந்ததால் கொடிக்கம்பத்தை அவிழ்க்க முற்பட்டபோது கொடிக் கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கரூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் த வெ க கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியான சம்பவமே இன்னும் அதன் வடு ஆறாத நிலையில், தற்போது, அதே த வெ க கூட்டத்தில் கொடிக்கம்பம் விழுந்து பேச்சாளர் ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.