• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடனா? : கி.வீரமணி காட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலத்துக்காக, வேலைவாய்ப்புக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, சமூகநீதிக்காக மாவட்டந்தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.

வருகிற 25ம் தேதி சென்னையில் நடைபெறும் பிரசார பயண நிறைவு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடப்பதை மக்களிடம் சென்று சேர்ப்பதே எங்கள் வேலை.
பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடன் எனக்கூறியது, அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னைகளுக்கு பதில் கூறியிருக்கிறார். கருப்பு திராவிடன் என தோல் நிறத்தை பார்த்து சொல்வதல்ல.

தோளை உயர்த்த வேண்டும் என சொல்கிறோம். நீட் தேர்வு, குலக்கல்வி திட்டம், மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றிற்கு துணை போய்விட்டு நான் கருப்பு திராவிடன் என்று சொன்னால் மட்டும் போதாது. கொள்கையால் அதனை அண்ணாமலை உணர்த்த வேண்டும். இவ்வாறு வீரமணி கூறினார்.