• Sun. Apr 28th, 2024

ஏ.கே-61 தீபாவளி வெளியீடா?

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என நடித்து வருகிறாராம். அவருக்காக ஜோடியாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கிடையில், தற்போது கிடைத்த தகவலின்படி, இந்த படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளர்களாம். வரும் மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *