• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

திமுகவுடன் மறைமுக அதிமுக பாஜக கூட்டணியா?இந்துமக்கள்கட்சி வருத்தத்துடன் அறிக்கை!

ByKalamegam Viswanathan

Mar 27, 2026

தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜகவை நோட்டா கட்சி என்று பாஜகவை அழைத்து தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று இங்குள்ள சனாதன எதிர்ப்பு சக்திகள் பாஜகவை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வந்தனர்.

அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முன்னால் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக மாநிலத்தலைவராக பொருப்பேற்ற பின்பு தனது புள்ளி விபர பேச்சாராலும்,அதிரடி அரசியலாலும்,பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தனது வாதத்திறமையாலும் என் மக்கள் என் உரிமை என பாதயாத்திரை வாயிலாகவும் பட்டி தொட்டி எல்லாம் பாஜகவை கொண்டு சென்றார். அண்ணாமலையின் அரசியல் செயற்பாட்டை கண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அஞ்சி அதிர்ச்சி அடைந்தனர்.திமுகவினர் மீது அண்ணாமலை வைத்த ஊழல்குற்றச்சாட்டும்,அன்றாடம் நடைபெறுகின்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் ஆளுங்கட்சி திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் தவிர்த்து வந்தனர். இதனால் தமிழக மக்கள் மத்தியில் பாஜவிற்கு மிகப்பெரிய வரவேற்ப்பை அண்ணாமலை பெற்று கொடுத்தார்.
ஒரு சதவீதம் இருந்த வாக்கு வங்கியை கடந்த பாராளுமன்றத்தை தேர்தலில் தனித்து நின்று 11 சதவீதமாக வாக்கு வங்கி அண்ணாமலையால் உயர்ந்துள்ளதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.

பாஜகவை தமிழகத்தில் வளர்க்க வேண்டுமென நேரம் காலம் பார்க்காமல் உழைத்த அப்படிப்பட்ட மாமனிதர் அண்ணாமலை அவர்களை சமீபகாலமாக ஒதுக்கி வைக்க பாஜகவை சேர்ந்த தமிழக முக்கிய புள்ளிகள் சதிதிட்டம் தீட்டுவது மன்னிக்க முடியாத குற்றம்.

அதேபோல் இந்துமக்கள்கட்சி நிறுவனத்தலைவர் தமிழ்திரு.அர்ஜுன்சம்பத் அவர்கள் அன்றைய முதல் இன்றைய வரைக்கும் பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து முழு நேரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.சனாதனத்தை பாதுகாக்க வேண்டுமென்றும்,சனாதன இந்து விரோத சக்திகளை ஓழிக்க வேண்டுமென்றும் இந்துக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்றும் பாஜகவிற்கு வலுசேர்க்கும் வகையில் மாநாடு பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஓய்வில்லாமல் போராடி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆனால் அர்ஜுன்சம்பத் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய வரைக்கும் சேர்க்காமலும், இந்துமக்கள்கட்சிக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால் அர்ஜுன்சம்பத்ஜிக்கு ஒரு அங்கீகாரமும் ஒரு முன்னுரிமையும் இந்த தேர்தலில் பாஜக அளிக்காதது இந்துமக்கள்கட்சி தொண்டர்களிடையே பாஜக மீது வேதனையும் அதிர்ப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் கட்சி ஆரம்பித்த கடந்த 25 வருடங்களாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் புலிகொடி வேந்தன் K.C.திருமாறன் அவர்கள் RSS சித்தாந்தத்தையும் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற கொள்கை உணர்வோடும் பாஜகவுடன் காலம்காலமாக பயணம் செய்து பாஜகவிற்கு தொண்டர்களே இல்லாத போது கூட பாஜகவிற்கு பக்க பலமாக நின்று தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல பாஜகவிற்கு ஏதேனும் யாரெனும் களங்கத்தை ஏற்படுத்தும் போது அதனை கண்டித்து முதல் ஆளாக குரல் கொடுத்து வந்தவர் தான் திருமாறன்ஜி.

இதனால் திருமாறன்ஜியை சங்கி என்றும்,பாஜகவின் கைகூலி என்றும் பல்வேறு விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் ஆளாக்கப்பட்டால் கூட அதனை எல்லாம் பெரிது படுத்தாமல் பாஜவை எங்கும் விட்டு கொடுக்காமல் பாஜவிற்காக இன்றைய வரைக்கும் களத்தில் இறங்கி போராடி வரும் திருமாறன்ஜிக்கு இந்த தேர்தலில் கட்டாயம் தொகுதி வழங்கப்படும் என்று நேற்றைய வரைக்கும் பாஜகவினர் கூறிவிட்டு திடீரென கடைசி நேரத்தில் திருமாறன்ஜிக்கு தொகுதி இல்லை என்று அவரை தேர்தலில் போட்டியிட பாஜகவினர் மறுப்பது நம்பிக்கை துரோகம். இச்செயலால் தென்னிந்திய பார்வர்ட் பிளாக்கட்சி தொண்டர்கள்கள் மட்டுமல்ல அவர்களது தோழன்மை அமைப்புகளான இந்துமக்கள்கட்சி போன்ற இந்து அமைப்புகளின் தொண்டர்கள் முதல் தேவரின பக்தர்கள் வரை அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சியை எப்படியாவது கொண்டு வரவேண்டுமென்று அண்ணாமலை எடுத்த முயற்சியும்,உழைப்பும் இன்று வீண் போகும் நிலைக்கு இன்றைய தமிழக பாஜக தலைமை தள்ளப்பட்டது.

காரணம் தற்போது பாஜ 27 சீட்டுக்கு ஆசைபட்டு அதிமுகவிடம் பாஜகவை மீண்டும் அடமானம் வைத்து விட்டது.மீண்டும் பாஜக துவக்க நிலைக்கு சென்று விட்டது.
அதற்கு சாட்சியே இந்த தொகுதி பங்கீடு.இதன் வாயிலாக அண்ணாமலையின் கனவு மட்டுமல்ல உண்ணமையான பாஜகவினர் தொண்டர்களின் கனவும் கலைந்துபோனது.

ஏனென்றால் இந்த முறை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைக்காமல் பாஜகவிற்கு ஆதரவளிக்க வந்த தேமுதிக,டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி,இந்து அமைப்புகளையும்,சாதிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்காமலும்,கூட்டணியில் சேர்க்காமலும், அதிமுகவிற்காக அடிமை போலவும்,ஊதுகுலாய் போலவும் பாஜக நடந்து கொண்டதையும் பாஜவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் அனைத்தும் பாஜகவிற்கு சம்பந்தமில்லாத தோல்வி அடையும் தொகுதிகளையும், அண்ணாமலை, அர்ஜுன்சம்பத்,திருமாறன்ஜி,
போன்றோர்களை இந்த தேர்தலில் ஓரங்கட்டியதை பார்த்தால் தீயசக்தி திமுக மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெற அதிமுகவும் இங்குள்ள பாஜக முக்கிய புள்ளிகளும் உள்குத்து வேலை செய்கிறார்களா?என எண்ணத்தோன்றுகிறது.

அதிமுக பாஜக தொகுதி பங்கீட்டை பார்க்கும் போது தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாகவும்,அதிமுக எதிர் கட்சியாகவும் இருந்தால் போதும் வேற யாரையும் தமிழகத்தில் நுழையவிடமாட்டோம் என்று அதிமுக திமுக போட்ட சதிதிட்டத்தில் பலியாவதும்,பாதிக்கப்படப்போவதும் தமிழக பாஜக தான்.

அதிமுக தலைமையுடன் தனது சீட்டுக்காகவும் பணத்துக்காகவும் கூட்டு சேர்ந்து கிட்டு சில தமிழக பாஜக முக்கிய புள்ளிகள் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது என்று ஒரு பொய்யான மாய்யை உருவாக்கி மத்திய மேலிடப்பொருப்பாளர்களிடம் தவறான கருத்துக்களை கூறி அவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள்.இதனால் பாதிப்பு பாஜகவுக்கு தான் தவிர அதிமுகவிற்கோ அல்லது பாஜக ஆதரவு அமைப்புகளுக்கோ அல்ல.

தங்களது சுயநலத்திற்காக கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்காமலும், கண்டு கொள்ளாமலும் அவர்களை ஓரங்கட்டி விட்டு நமக்கு சீட்டு கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தோடு தமிழக பாஜக தலைமை செயல்படுகிறார்கள்.

தமிழக பாஜக தொண்டர்களையும்,
கூட்டணி கட்சியினரையும் கொஞ்சம் கூட மதிக்கவில்லை.ஆணவத்திலும் அகங்காரத்திலும் தான்தோன்றி தனமாக அனைவர் மனதையும் புண்படுத்தும் விதமாக இங்குள்ள பாஜக தலைமை நடந்து கொள்வதை பார்த்தால் இந்த தேர்தலில் கண்டிப்பாக பாஜக டெபாசிஸ்ட் கூட வாங்காதது போல் தெரிகிறது.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சைமன் என்ற சீமானும்,தவெக ஜோசப்விஜய் தனித்து நின்று தேர்தலில் சந்திக்கிறார்கள். அதேபோல் டாக்டர் ராமதாஸ்,சசிகலா தலைமையில் இந்து அமைப்புகளையும் சாதிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கிறார்கள்.இந்த நிலையில் கூட்டணியில் அங்கம் வைக்கும் திருமாறன்ஜி போன்றோர்களுக்கு சீட் வழங்காமல் ஓரங்கட்ட நினைப்பது எதிராளிகளுக்கு தான் லாபமே தவிர பாஜகவிற்கு அல்ல.

தற்போது இன்றைய சூழ்நிலையில் ஆந்திராவில் எப்படி பவன்கல்யாண் தனிகட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று துணை முதலமைச்சர் ஆனாரோ அதேபோல் அண்ணாமலை தனிகட்சி ஆரம்பித்து பாஜக ஓரங்கட்டிய தென்னிந்திய பார்வர்ட் பிளாக்,புதிய தமிழகம்,இந்துமக்கள்கட்சி போன்ற கட்சிகளையும் இந்து அமைப்புகள் மற்றும் சாதிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்து அண்ணாமலைக்கு என இருக்கும் பெண்கள் கூட்டம், ரசிகர் மன்ற இளைஞர் பட்டாளத்துடன் தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனை அண்ணாமலை இன்றைய வரைக்கும் செய்யவில்லை.காரணம் பாரத பிரதமர் மோடிஜி மீதும் அமித்ஷாஜி மீதும் அதீத பற்று கொண்ட காரணத்தாலும்,பாஜகவை வளர்த்த நாமே துரோகம் செய்யக்கூடாதென்ற எண்ணத்தாலும் அந்த அரசியலை அண்ணாமலை செய்யவில்லை.

பாஜகவின் உண்மை விசுவாசிகளான பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கும்,அர்ஜுன்சம்பத் அவர்களை கூட்டணியில் சேர்க்காததற்கும்,திருமாறன்ஜிக்கு சீட் ஒதுக்க படாததற்கும் இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது.

பாஜக சார்பில் திருமாறன்ஜிக்கு சீட் ஒதுக்குகிறோம் என்று அன்று கூறிவிட்டு இன்று எங்களுக்கே சீட் குறைவாக தான் உள்ளது என்றும்,தஅதிமுக எடப்பாடி அவர்களிடம் போய் நம்பி சீட் கேளுங்கள் என்று பாஜக தலைமை திருமாறன்ஜியிடம் கூறியதால், அவரோ அதிமுக தலைமையை தொடர்பு கொள்ளும் போது இப்ப வந்து சீட் கேட்கிறீர்கள் அன்றே வந்து எடப்பாடி அவர்களை சந்தித்து சீட் கேளுங்கள் பல முறை கூறினோம். ஆனால் நீங்களோ (திருமாறன்ஜி) இல்லை நாங்கள் பாஜகவுடன் தான் கூட்டணி என்று அன்று கூறிவிட்டு இப்பொழுது அவர்கள் (பாஜக)சீட் தரவில்லை நீங்கள் (அதிமுக) சீட் தாருங்கள் என்று எங்களிடம் கேட்டால் நாங்கள் எப்படி திடீரென உங்களுக்கு தரமுடியும் என்றும் இதில் எந்த விதத்தில் நியாயம் என்றும் உங்களுக்கும் (திருமாறன்ஜி) சேர்த்து தான் நாங்கள் 27 சீட்டு பாஜகவிற்கு வழங்கி உள்ளோம் என்று அதிமுக தலைமை தற்போது கூறியுள்ளதை நினைத்தால் பாஜகவை நம்பி வந்த திருமாறன்ஜிக்கு பாஜகவினரால் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது.

பாஜகவிற்காக முட்டுகொடுத்த திருமாறன்ஜிக்கே இந்த நிலைமையா?இதற்கு தான் பாஜகவை நம்பி யாரும் சென்றால் அவர்களுக்கு தேவைபடும் போது கருவேப்பில்லை மாதிரி அவர்களை உபயோகப்படுத்தி விட்டு அதன் பிறகு தூங்கி எரிந்து விடுவார்கள்.இதுதான் பாஜகவில் இருக்கும் இங்குள்ளவர்களின் குணம். இனிமேலாவது திருமாறன்ஜி சிந்திக்க வேண்டுமென்று சனாதன எதிர்ப்பாளர்கள் திருமாறன்ஜிக்கு சமுகவலைதளங்களில் அறிவுரை கூறுவதை நினைத்தால் அவர்களுக்கு அடியேன் போன்றோர்கள் பதில் கொடுக்க முடியவில்லை.

தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றும் உண்மையான பாஜக தொண்டர்களும்,பாஜக ஆதரவு அமைப்புகளும் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளையும் மனதார ஏற்கவில்லை.இந்த தொகுதிகள் அனைத்தும் எதன் அடிப்படையில் பங்கீடு செய்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் தற்போது 2 சதவீதம் வாக்கு வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட் ஒரு ராஜ்யசபா சீட் திமுக கொடுத்ததை போல்,11 சதவீதம் வாக்கு வைத்திருக்கும் பாஜகவிற்கு ராஜ்யசபை சீட் இல்லாவிட்டாலும் குறைந்தது 35 சீட்டாவது வெற்றி பெறும் தொகுதியை மீண்டும் அதிமுகவிடம் கேட்க பாஜக மத்திய பொருப்பாளர்கள் முன்வரவேண்டும்.

ஆகவே தமிழகத்தில் தீயசக்தி திமுக ஒழியவேண்டும்,தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர வேண்டுமென்று நினைத்தால் காங்கிரசுக்கு எப்படி திமுக முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதேபோல் பாஜகவிற்கு அதிமுக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளை மறுஆய்வு செய்து அதிமுகவிடம் கூடுதல் தொகுதி பெறவேண்டும்.
பாஜக என்ற கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்த அண்ணாமலையை மறைமுக எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள முக்கிய புள்ளிகளின் சுயநலத்திற்காக அண்ணாமலையை ஓரங்கட்ட நினைப்பது தமிழகத்தில் பாஜகவை ஓரங்கட்டுவது போல் ஆகிவிடும் என்பதால் அண்ணாமலைக்கு கட்சியில் சீட்டும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும்.
RSS சங்கத்தின் தொண்டனாகவும், பாஜகவிற்கு இத்தனை காலங்களாக குரல் கொடுத்து வரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிதலைவர் திருமாறன்ஜி அவர்களுக்கு ஏதேனும் சாக்குபோக்கு சொல்லாமல் மதுரையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை திருமாறன்ஜிக்கு பாஜக ஒதுக்க வேண்டும்.இந்துமக்கள்கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் அவர்களுக்கு சீட் வழங்காவிட்டாலும் இந்துமக்கள்கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறமுடியும்.

இல்லையென்றால் கூட்டணி பலம் பணபலத்துடன் விளம்பர அரசியல் யுக்தியுடன் மோதும் தீயசக்தி திமுக மீண்டும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு இவரால் தோற்றோம் அவரால் தான் தோற்றோம் என்றும் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்றும் கருணாநியை போல் பாஜக தலைமை புலம்பும் சூழ்நிலை ஏற்படும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக உலகம் போற்றும் உத்தமர் மோடிஜியின் தொண்டனாகவும்,தமிழகத்தில் பாஜகவால் ஆன்மீக ஆட்சி மலரவேண்டுமென்ற எண்ணத்தோடு இச்செய்தியை இந்த தருணத்தில் வருத்தத்துடனும்,வேதனையுடனும் பதிவு செய்கிறேன்.

குறிப்பு:இச்செய்தி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!சிந்திப்பதற்காக மட்டுமே…