• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியில் நீர் பாசன உள்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியார் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இருந்தது தற்போது திமுக அரசில் முறையாக பராமரிக்கப்படவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது..,
தென்மேற்கு பருவமழை குறையும் பொழுது விவசாய உற்பத்தி பாதிப்பு, கிராம பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஆகியவை ஏற்படும். இது போன்ற காலங்களில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் நீர் பாசன கட்டமைப்புகளை இந்தியாவே பாராட்டு வகையில் வளர்ச்சியைப் பெற்று, இந்தியாவிலேயே தமிழகத்தில் நீர் பாசன உள்கட்டமைகளில் முதன்மையாக இருந்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால் தற்போது பருவ மழை குறைவின் காரணமாக விவசாயிகள் மிகுந்த வேதனை உள்ளனர். மேலும் நீர் பாசன உள்கட்டமைப்பு திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை. இந்தியாவிலேயே முதன்மையாக இருந்த நீர் பாசன உள்கட்டமைப்பு தற்போது திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் இதனால் பாசன பரப்பு, பயிர் உற்பத்தி ஆகியவை பாதிப்பு ஏற்படும்.
பாசன உட்கட்டமைப்புகளை சீர்படுத்த திமுக அரசு எதையும் செய்யவில்லை.அது போல் நமக்கு பெற வேண்டிய ஜீவாதார உரிமைகளையும் பெற்று தராத கையாளாகாத அரசாக உள்ளது. விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திமுகவின் செயல் உள்ளது.டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 90 வது கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். அதில் தமிழக அரசின் சார்பில் வினாடிக்கு 13,000 கன அடியை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கூறப்பட உள்ளது.
ஆனால் இதற்கு உரிய அழுத்தத்தை முதலமைச்சர் கொடுக்கவில்லை ஆனால் கர்நாடகா அரசின் முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து நமக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நம்மை பாதுகாக்க வேண்டிய, நமது உரிமையை பெற்று தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இதற்கு தீர்வு காணாமல், விவசாயின் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க நினைக்கும் சிந்தனை இருக்கிறார்கள் தவிர, விவசாயிகளின் வாழ வைப்பதற்காக எந்த முயற்சி எடுக்கவில்லை.
கர்நாடக அரசை கண்டித்து கண்டனமும் இதுவரை தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். இன்றைக்கு விவசாயிகளை காப்பாற்றுவது யார்? நாதியற்ற தமிழகத்தை காப்பாற்றுவது யார்? என்று குரல் ஒலித்து வருகிறது. நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார். விவசாயிகளின் கண்ணீரை துடைத்து விவசாய உரிமையை நிலை நாட்டுவார் என கூறினார்.