திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிகுமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட மலை உச்சியில் உள்ள தீபத்துணில் தீபம் ஏற்றினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சம்பந்தப்பட்ட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியை நான் நேரில் ஆய்வு செய்கிறேன் என நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூண் அமைந்துள்ள பகுதியை பார்வையிட தற்போது மலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் தற்போது நீதிபதியுடன் உடன் சென்றனர்.
மேலும் அறலையத்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் அலுவலர்கள் உடன் சென்றனர். திருப்பரங்குன்றம் மலை மீது நீதிபதி சுவாமிநாதன் ஆய்வை முடித்துவிட்டு திரும்பினார். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சற்று அடங்க துவங்கிய நிலையில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைமீது ஏறி நேரடியாக ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
