



கட்டிடத்துறையில் நவீன காலத்திற்க்கு ஏற்ற பழமையின் சிறப்புகள் வாய்ந்த நேர்மறை ஆற்றல் ஐஸ்வர்யம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் சுருக்கி பிளஸ் திரவம் அறிமுக விழா
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சிவானா குரூப்ஸ் சார்பில் சுருக்கி பிளஸ் அறிமுக விழா நடைபெற்றது .தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் 50 ஆண்டுகளை தாண்டி நிலைத்திருப்பது அரிதாகி விட்ட நிலையில் பழைய கட்டிடங்கள் நூற்றாண்டுகளை கடந்து இன்றும் கம்பீரமாக உள்ளது கட்டுமானத்துறையில் நம் மூதாதையர்கள் பெற்றிருந்த பேரறிவினைஆய்வு செய்து சிவானா குரூப் என்கிற நிறுவனம் அவற்றின் சிறப்பு அம்சங்களான உறுதி, நீண்ட காலம் நிலைத்திருத்தல் , நேர்மறை ஆற்றல், ஐஸ்வர்யம் போன்றவை தற்போது கட்டப்படும் கட்டிடங்களுக்கு கிடைக்கும் வகையில் ஒரு ஃபார்முலாவை உருவாக்கி இருக்கின்றனர் அதன் அடிப்படையில் சுடுக்காய், வெட்டிவேர், கற்றாழை சாதிக்காய் , சுண்ணாம்பு கருப்பட்டி உள்ளிட்ட ஒன்பது பொருட்களைக் குறிப்பிட்ட விதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட கலவையே சுருக்கி பிளஸ் என்பதாகும் இந்த விழாவில் சுருக்கி பிளஸ் திரவத்தை மீனாட்சி சுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார் அதனை உடையப்பன் என்பவர் பெற்றுக் கொண்டார்.
விழா வில் பேசிய சிவனேசன் கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கவும் நேர்மறை ஆற்றல் மற்றும் ஐஸ்வர்யம் வகையில் பல ஆண்டுகள் பழமையான கட்டிடங்க்ளை ஆய்வு செய்து இந்த சுருக்கி பிளஸ் திரவத்தை கண்டுபிடித்ததாகவும் இது புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் சாந்து களவையுடன் சேர்ந்து பூசவும், ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் வண்ணப்பூச்சு அடிப்பதற்கான கலவையாகவும், வீட்டின் மேற்கூரையில் சுருக்கி போட பயன் பயன்படுத்தும் கலவையிலும் இதை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்


