விவசாய பயிர்களுக்கான ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்து, மல்லசமுத்திரம் பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பருத்தி விவசாயம் குறைந்து வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் 900 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி தற்போது 600 ஹெக்டரில் மட்டுமே பயிரிடப்பட்டிருப்பதாகவும் இதனால் உற்பத்தி குறைந்து போய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தென்னிந்திய மில்கள் அசோசியேசன் எனப்படும் சைமா (SIMA)மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி பருத்தி பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பருத்தி களில் பரவும் நோய் தேவையான மருந்து உற்பத்தி திறன் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி கண்டறிவது என்பது குறித்த டெமோ செய்து காண்பிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் மாமுண்டி கிராமத்தில் 79 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுனந்தா ரக பருத்தி வயலில் ட்ரோன் மூலம் சோதனைப் முயற்சியாக பருத்தி பயிர்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் பருத்தி பயிரை பாதிக்க கூடிய நோய்கள் குறித்தும் பருத்தி பயிரின் விளைச்சல் குறித்தும் முன்கூட்டியே கண்டறிந்து தேவையான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பருத்திப் பயிர்களுக்காகும் செலவு குறையும் எனவும், அவ்வாறு மேற்கொள்வதால் விவசாயிகளுக்கான வேலை நேரம் மருந்து தெளிக்கும் அளவு பருத்தி உற்பத்தியை பெருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என பலவற்றை மேம்படுத்திக் கொடுக்க முடியும் என அறிந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரைன் டெக் பன்னாட்டு நிறுவனம் 600 மீட்டர் உயரம் பறக்கக்கூடிய திறன் கொண்ட ட்ரோன்கள் மூலம் பருத்திப் பயிர் செய்முறை மாதிரி ஆய்வு நடத்தியது. இந்த ட்ரோன் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பிரைன் நிறுவன சோசியல் ப்ராசஸ் லீடர் அருண்குமார் விளக்கமாக பதில் அளித்தார். ஆரம்ப நிலையில் உள்ள இந்த சோதனை முயற்சி விரைவில் பல்வேறு கட்டங்களை கடந்து விவசாயிகளுக்கு முழு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் சைமா நிறுவன சேர்மன் லெவன் டெக்னோ பிளன்ட் மேலாண்மை இயக்குனர் ஜி வெங்கட ராமச்சந்திரன்,சைமா நிறுவனச் செயலாளர் மற்றும் காட்டன் பிரீடரான டாக்டர் எம் ஆஷா ராணி, தமிழக வேளாண்மை துறை நாமக்கல் மாவட்ட மாநில சட்டப் பணிகள் துணை இயக்குனர் கவிதா மல்ல சமுத்திரம் வேளாண்மை துறை துணை இயக்குனர் யுவராஜ்,நாமக்கல் கே.வி.கே வின் அக்ரோணாமிஸ்ட் அழகுதுரை மற்றும் சைமா நிறுவன குழுவினர் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





