• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரை டூ திருப்பதி விமான சேவை அறிமுகம்!..

Byமதி

Oct 13, 2021

மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி நாள்தோறும் மதுரை விமான நிலையத்திலிருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை அடையும். அதேபோல் திருப்பதி விமான நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு 6.40 மணிக்கு வந்து சேரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த நேரத்தில் மதுரையிலிருந்து திருப்பதி செல்ல இந்த விமான சேவை, பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.