• Tue. Feb 18th, 2025

மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது பேட்டி

ByKalamegam Viswanathan

Jan 20, 2025

திருப்பரங்குன்றத்தில் அனைத்து சமய மக்களும் நல்லிணக்கத்தில் உள்ளனர். சிலர் துண்டுதலின் பேரில் நல்லிணக்கத்தை கெடுக்க முயல்கின்றனர். மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாடு உரிமை உள்ளது . அதனை சர்சையாக்கி அரசியலாக்க முயல்பவர்களை தனிமைபடுத்த வேண்டும் என அப்துல் சமது MLA தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி

மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்தச் சென்ற இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மலை மேல் கந்தூரி விழா நடத்தி சமபந்தி விருந்து நடைபெறுவதாக திருப்பரங்குன்றம் அனைத்து ஜமாத்தார்கள் அறிவித்திருந்த நிலையில், மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மலை மேல் உள்ள தர்காவிற்கு செல்பவர்கள் தொழுகைக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மேலே உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கந்தூரி விழா நடத்துவதற்காக மலைமேல் உள்ள தர்காவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலைக்குசெல்ல முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மலைமேல் உள்ள தர்காவில் ஆய்வு செய்வதற்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளருமான அப்துல் சமது ஆய்வு மேற்கொள்ள சென்றார். மேலே உள்ள தர்காவில் உள்ள இடங்களை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அப்துல்சமது திருப்பரங்குன்றம் மலை மீது கந்தூரி விழா நடத்துவதற்கு அனுமதி மறுப்பது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வரசபாநாயகர் இடம் மனு அளித்ததாகவும், தொடர்ந்து சட்டசபை விவாதத்தின் போது இது குறித்து உரையாற்றி வந்ததாகவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மலை மேல் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு,கோழி பலியிடப்பட்டு உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்கள். தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடுவதற்கான இடம், உணவு சமைப்பதற்கான இடம், அனைவரும் சாப்பிடுவதற்கான இடம் உள்ளது.

மேலும் கந்தூரி நடத்தியதற்கான ஆதாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருப்பதாகவும், மேலும் இது சிக்கந்தர் மலை தான் என்பதற்கான ஆதாரம் 1920 ல் வந்த தீர்ப்பிலேயே சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவர்கள் என அனைவரும் இந்த தர்காவில் சென்று வழிபட்டு வரும் நிலையில் தற்போது சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருவதாகவும், மதவாத சக்திகள் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதாகவும், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து காலம் காலமாக செய்து வரும் வழிபாட்டு முறையை அனுமதிக்க வேண்டும். மேலும் தர்காவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்த, எம்எல்ஏ அப்துல் சமது எங்களுக்கு சொந்தமான மலை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. இதை தமிழக அரசிடம் காண்பித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு செல்லக்கூடிய பாதைகளை சீரமைக்க ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் வேறு திட்டத்திற்கு மாற்றப்பட்டதாகவும், இதுகுறித்தும் தமிழக அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தெரிவித்தார்.