• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை வயிற்றில் கடத்தி வந்த நபரிடம் விசாரணை

ByN.Ravi

Apr 1, 2024

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், துபாயில் இருந்து காலை 10:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி, இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில், வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரிய வந்தது.
இராமாதபுரம் மாவட்டத்தை கேர்த்த அஸ்ரப் அலி என்பவரின் மகன் உமர் பாரூக் (வயது38). என்று தெரிய வந்தது.
இதையடுத்து உமர் பாரூக் வயிற்றில் இருந்த 16 கேப்சூல் உருண்டைகளை தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து மருத்துவர்கள் அதிகரிகளின் மேற்பார்வையில் இனிமா கொடுத்து வெளியே எடுக்கப்பட்டது.
அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது .
அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு 24 லட்சத்து 62 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. எனவே, தங்கத்தை கொடுத்து வந்தால் நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.
ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அயன் பட வானில் வயிற்றில் கடத்தி வந்து மதுரை விமான நிலையத்தில் பரபரத்தை ஏற்படுத்திய வாலிபரை மதுரை சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.