• Thu. Apr 24th, 2025

உலக மகளிர் தின கருத்தரங்கு கலை நிகழ்ச்சி பரிசளிப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Mar 26, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஐ வி அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின கருத்தரங்கு கலை நிகழ்ச்சி பரிசளிப்பு விழா நடந்தது . இந்த விழாவிற்கு, மகளிர் அணி தலைவி சிலம்பரசி தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் பாபநாசம் தலைவர் தங்கராசு துணைத் தலைவர் முருகவேல செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்துலட்சுமி வரவேற்றார். இந்த விழாவில், புதிய நீதி கட்சி தென் மண்டல
செயலாளர் வெங்கடாசலம் பெண்களின் முன்னேற்றம் பற்றியும், போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பேசினார். வி எம் கே மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன், சிவகாசி செல்வி, விளாங்குடி கீதா ஆகியோர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இதில், சங்க நிர்வாகிகள் மாரியப்பன், ராஜேந்திரன், நாகமுத்து ராஜா, சந்தன பாண்டி, பால சரவணன், வைரமுத்து, சோனை பாண்டி, கண்ணன், சுகந்தி, பரமேஸ்வரன், பாலகுமார், வேல்முருகன்,ராம்மோகன், மகளிர் அணி முத்துலட்சுமி, சரஸ்வதி, தீபா, லாவண்யா உட்பட பலர்கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் காளீஸ்வரி நன்றி கூறினார்.