• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

ByA.Tamilselvan

Mar 11, 2023

சர்வதேச மகளிர் தினத்ம் தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது
சர்வதேச மகளிர்தினம் மாரச்-8 அன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பள்ளி,கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சார்பாகவும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திரும்ங்கலம் அருகேயுள்ள தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் வெகுசிறப்பாக பெண்கள் தினத்தைக் கொண்டாடப்பட்டது.


திருமங்கலம் மாதர் சங்கத்தின் நிர்வாகி பாண்டிச்செல்வி மற்றும் முனீஸ்வரி” ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பாண்டிச்செல்வியின் பாடல்கள் மூலமாக மகளிர்தினம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் . முனீஸ்வரியின் சர்வதேச மகளிர் தினத்தின் வரலாற்று குறித்த சிறப்பாக பேசினார்.
தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி மாணவர்கள் நடித்த குறும்படமான “குழந்தைகள் பாதுகாப்பு” என்ற சிறார் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல “அயலி” வெப் சீரியலை திரையிட்டப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் அவரது பொற்றோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை ரா. முத்து கிருஷ்ணன். ரா கெளரி செ. மீனா அங்கு தமிழ் செல்வி. நர்மதா பிரேமலதா, தஆ இளங்குமரன் மற்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.