
ஜாய் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் சர்வதேச வேளாண்மை மாநாடு
நான்கு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்பு.
கன்னியாகுமரியை அடுத்துள்ள வடக்கன் குளம். ஜாய் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்)9,10,11,12 ஆகிய 4 நாட்கள் சர்வதேச வேளாண்மை மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி தொடங்கி வைக்கிறார். இந்த சர்வதேச வேளாண்மை மாநாட்டில் ஹாங்காங், தாய்வான், மெக்சிகோ, எத்தியோப்பிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
ஜாய் பல்கலைக்கழகத்தில் நான்காம் நாள் மாநாட்டில் வேளாண்மை ஆராய்ச்சி படிப்பில் சாதனை படைத்தவர்கள், வேளாண்மை தொடர்பாக சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டவர்கள் கவுரவிக்கும் படுவார்கள் என தெரிவித்த மாநாடு ஒருங்கிணைப்பு செயலாளர் டேனியல் மற்றும் ஜாய் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேஷ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தார்கள்.
சர்வதேச வேளாண்மை மாநாட்டின் நோக்கங்கள் பற்றி. துணைவேந்தர் ராஜேஷ்யிடம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் வைத்த கேள்விகளுக்கு துணை வேந்தர் தெரிவித்த தகவல்கள்.
ஜாய் பல்கலைக்கழகமும்,தி இந்தியன் வேளாண்மை கல்லூரி, மத்திய பட்டு உற்பத்தி கழகம்,நபார்டு வங்கியுடன் இணைந்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்)9,10,11,12 நாட்களில் நடைபெறும் மாநாட்டில் வேளாண்மை அறிவியல்,உணவு அறிவியல், உள்ளிட்ட பல்வேறு.துறைகளில் சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
மாநாட்டின் முதல் நாள் பட்டுப்புழு விவசாயிகளுக்கு பட்டு உற்பத்தியின் புதிய உத்திகள் குறித்து விளக்கப்படுகிறது. 2_வது நாக விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்து செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த இரண்டு நாட்கள் மாநாடு ஜாய் பல்கலைக்கழகத்தில் வைத்து நடை பெறும் எனவும் தெரிவித்தார்.
