

நாகர்கோவில் நாகராஜா திடலில் கடந்த (ஜுன்2)ம் தேதி நடப்பாதக இருந்த “குமரி சங்கமம்”நிகழ்வு, தேதி மாற்றப்பட்டு கடந்த (ஜூலை_4) ம் தேதி நடைபெற்றது. நாகர்கோவில் மாநாகராட்சியின் 24வது வார்டின் உறுப்பினர் ரோஸிட்டா பாஜகவை சேர்ந்தவர். இந்த உரிமையில் வார்ட் உறுப்பினர் ரோஸிட்டவும். இவரது கணவர் திருமால், பாஜகவின் நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் என்ற உரிமையில். அவர்களது வார்டில் (24) 2024 – தேர்தலுக்கான பிரச்சாரத்தின் முதல் துவக்க நாளில். மாநில தலைவர் அண்ணாமலக்கு வார்டு பாஜகவின் உறுப்பினர் என்ற நிலையில். அண்ணாமலைக்கு ஆழ் உயர மாலையும், செங்கோலும் கொடுக்க எல்லா ஏற்பாடுகள் செய்வதை ரோஸிட்டாவின் கணவர் திருமால்? குமரி மாவட்ட பாஜகவின் தலைமை அலுவலகத்திலும், மாவட்டம’ தலைவர் தர்மராஜிடம் ஏற்கனவே தெரிவித்து வாய் மொழி அனுமதி பெற்றிருந்தார்.
பொதுக்கூட்டம் தினமான ( ஜூலை)4-ம் தேதி செங்கோல், ஆழ் உயர மலை. இரண்டையும் மாநித்தலைவருக்கு, கணவனும், மனைவியும் இணைந்து கொடுக்கும் கனவில் இருந்துள்ளார்கள். குமரி சங்கமம் நிகழ்ச்சி மேடையிலே. பொதுக்கூட்டம் நடக்கும் பகுதியான 24-வது வார்டு பாஜகவின் உறுப்பினர் ரோஸிட்டா, அவரது கணவரும், நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் என்ற நிலையிலும், தங்களுக்கு மேடையில் இருக்க இடம் கிடைக்கும் என நம்பியிருந்னர். ஆனால் இவர்கள் இருவரையும் மேடையில் ஏறவே அனுமதி மறுக்கப்படும் என்று சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவர்கள் நினைத்தது நடக்காமல் போனது. !
பொதுக்கூட்டம் தொடங்கி வரவேற்பு உரையின் போதே மைக் தகராறு செய்த வண்ணம் இருந்தது.
சிறப்பு பேச்சாளரான அண்ணாமலை பேச்சைத் தொடங்கும் முன்னரே, வாய்ப்பு கிடைக்கும் என கணவனும், மனைவியும் நம்பி மேடை அருகிலே, திருமால் கையில் ஆழ் உயர மலையுடனும், பாஜக கவுன்சிலர் ரோஸிட்டா கையில் செங்கோலுடனும் காத்திருக்க, விழா அமைப்பாளர்கள் இருவரையும், அண்ணாமலை பேச்சைத் தொடங்கும் முன் வரை அழைக்கவில்லை. இருவர் நிற்பதை மேடையில் இருந்த மாவட்ட தலைவர் தர்மராஜ், பொன்னார், எம்.ஆர் காந்தி ஆகியோர் இருந்தும் இவர்கள் இருவரையும் கவனிக்கப்படாத நிலையில், அண்ணாமலை பேச அழைக்கப்பட்டார். கூடியிருந்த கூட்டம் கை ஒலி எழுப்பி வரவேற்றனர். கையில் மாலையும், செங்கோலூமாக.. அடுத்து என்ன செய்வது என்ற கேள்விகுறி.?. மனதில் ஓர் அவமான நினைவுகளோடு இருவரும் நின்றனர்.

மேடையில் இருந்தவர்களும், கூட்டத்தினரும் அண்ணா மலையின் பேச்சில் கவனம் செலுத்த. இத்தனைக் காலம் எந்த இயக்கம் வளரவேண்டும் என உழைத்ததற்கு கிடைத்த சன்மானம். நெஞ்சில் உலா வர… இவர்கள் இருவர் நிலையை பார்த்த அந்த வார்ட் பாஜகவினர் இருவரின் அருகில் வந்து அடுத்து என்ன என்ற கேள்வியை தாங்க முடியாத ரோஸிட்டா கண்கள் பனிக்க அங்கிருந்து கிளம்பி கூட்டத்தை விட்டு வெளியே வந்த நிலையில், உடன் வெளியே வந்த கணவர், அந்த பகுதி பாஜகவினர் எடுத்த முடிவு. இந்த இடத்தை காலி செய்வோம் என்றவர்கள் அடுத்து போய் நின்ற இடம், வேப்பமூடு பெரும் தலைவர் காமராஜர் சிலை முன்பு ரோஸிட்டா பெரும் தலைவர் காமராஜர் சிலைக்கு மாலயிட்டு செங்கோலையும், பெரும் தலைவர் காமராஜர் சிலை அருகே வைத்து விட்டு. ரோஸிட்டா, அவரது கணவர் திருமால், இருவருடன் இருந்த கட்சியினர் முதல் கட்டமாக பாஜகவில் இருந்து விலகுவதாக, மாவட்டத்தலைவருக்கும், மாநிலத்தலைவருக்கும் கூட்டாக தகவல் அனுப்பிய செய்தி.
குமரி சங்கமம் கூட்டம் முடிந்து கலைந்து சென்றவர்கள் மத்தியில், 2024-ல் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோசத்தை.!?
பாஜக கவுன்சிலரை மதிக்காததால் கட்சியில் இருந்து விலகல் அடுத்து அவர் எடுக்க போகும் முடிவு என்ன.?
பொன்னார் ரோஸிட்டா வீடு தேடி போனார். வீட்டிற்கு வந்தவரை இன் முகம் காட்டி வரவேற்ற தம்பதிகள், எதுவுமே நடக்காதது போல் பொன்னாரிடம் பொதுவாக பேச, அடுத்திருந்த கட்சியினரும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக அமர்ந்திருக்க,
பொன்னார் மூன்று மணி நேரம் மேற்கொண்ட சமாதான முயற்சி பலன் கொடுக்காத நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்.
கவுன்சிலர் வீட்டின் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரிடம் பேசிய போது கிடைத்த தகவல்.
கடந்த ஜூன் மாதம் 2_ம் தேதி குமரி சங்கமம் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு அழைப்பிதழ்கள் எல்லாம் அடித்து வினியோகம் செய்யப்பட்ட நிலையில்,
குமரி சங்கமம் பொதுக்கூட்டம் மட்டும் அல்ல 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முதல் நிகழ்வு. 2024-யில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்னும் புதிய கோஷத்தை குமரியில் ஒலிக்கச் செய்வது, இந்தியாவின் 8 திக்குகளிலும் எதொரலிக்க செய்வதை என்ற நோக்கம் என்ற குமரி சங்கமம் அழைப்பிதழில் 24 வது வார்ட் பாஜக கவுன்சிலர் பெயர் இல்லாத நிலையில், இதை மாவட்டத்தின் சில முக்கியஸ்தர்களின் திட்டமிட்ட செயல்.அவர்கள் யார், யாரென்று தெரியும் பெயர்கள் தெரியும். அவர்களின் பெயர்களை எல்லாம் சொல்லி பெரிய ஆட்களாக்க விரும்பவில்லை என தெரிவித்தார்கள்.
அண்ணாமலை 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் இடத்திலே இத்தனை களேபரமா.!?
நாகர்கோவில் மாநகராட்சி தி மு க. உறுப்பினர்களின் எண்ணிகயில் ஒன்று கூடிய பணி அண்ணாமலை வருகையால் குமரி பாஜகவுக்கு கிடைத்த சறுக்கல்.
