• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

ByP.Thangapandi

Mar 31, 2026

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் வேத் பதி மிஸ்ரா ஆய்வு செய்தார்.

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்ற சூழலில். இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு குடிநீர், கழிப்பறை,மின்சாரம், மின்விசிறி, காற்றோட்டம் உள்ள வாக்குச்சாவடி அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்தி கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தேர்தல் பொது பார்வையாளர் வேத் பதி மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத மையங்களை விரைந்து செய்து முடிக்க தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான உத்கர்ஷ்குமார், வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.,