• Sun. May 5th, 2024

அநீதி திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jul 23, 2023

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், துஷாரா நடிப்பில் வெளியாகியிருக்கிற திரைப்படம் அநீதி.

தனக்கு யாருமில்லாத ஒரு இளைஞராக வரும் அர்ஜூன் தாஸ் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் அந்த வேலைக்கு யாரும் மரியாதை தருவதும் இல்லை அதனால் மன அழுத்தம் காரணமாக யாரையும் கொலை செய்யும் எண்ணைத்தைக் கொடுக்கிறது.

அந்த நேரத்தில் இளைஞர் அர்ஜூன் தாஸுக்கு ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணான துஷாரா விஜயனின் காதல் கிடைக்கிறது ஆதரவற்ற பின்னணி கொண்ட இருவருக்கும் இடையில் சுமூகமான வாழ்வு தொடங்கும்போது துஷாரா விஜயனின் முதலாளிப் பெண் திடீரென இறந்து விடுகிறார்.

அவரின் இறப்பிற்கான பழி அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயனின் மீது விழுகிறது அந்தக் கொலைப்பழியிலிருந்து அவர்கள் தப்பித்தனரா? அர்ஜூன் தாஸின் மனநலப் பிரச்னை என்ன ஆனது? என்பதுதான் அநீதி திரைப்படத்தின் கதை.

செல்வந்தர்கள் தங்களைவிட செல்வம் குறைவானவர்களை எப்படி நடத்துகின்றனர்? வேலை அழுத்தம் தொழிலாளர்களை எந்தளவுக்கு சித்ரவதை செய்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறது திரைக்கதை.

உணவு விநியோகம் செய்யும் இளைஞனாக வரும் அர்ஜூன் தாஸ் காட்சிகளுக்கு காட்சி உயிரைக் கொடுத்திருக்கிறார் மன அழுத்தம் கொண்ட இளைஞனான கதாபாத்திரத்திற்கு கச்சித்தமாக பொருந்தியிருக்கிறார் கோபத்தால் வெடிக்கும் இடங்களிலும் துஷாரா விஜயனின் கரத்தைப் பார்த்து தவிக்கும் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

முந்தைய திரைப்படங்களில் வில்லனாக இருந்த அர்ஜூன் தாஸை இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

துஷாரா விஜயன் நடித்த திரைப்படங்களில் வந்த “நேருக்கு நேர்” பாணியிலிருந்து விலகி தனது முதலாளிப் பெண்ணிடம் அடங்கி ஒடுங்கி அழும் காட்சிகளின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார் துஷாரா விஜயன் உயிர் வாழ்தலுக்குத் தேவையான பணத்திற்காக பணியிடத்தில் அவமானப்படும் இடங்களில் இதயத்தை நொறுங்கச் செய்திருக்கிறார்.

அர்ஜூன் தாஸிடம் ஆதரவாக தஞ்சம் புகுவதிலிருந்து அவர் மீது கோபம் கொண்டு அடிப்பது வரை துஷாரா பட்டைய கிளப்பியிருக்கிறார்.

துணை கதாபாத்திரங்களும் காட்சிக்கு காட்சி கைகொடுத்திருக்கின்றனர் சுரேஷ் வெங்கட், வனிதா, பரணி, ஷா ரா, காளி வெங்கட், அர்ஜூன் சிதம்பரம் என பலரும் படத்தின் கதாபாத்திரத்திற்கேற்றார் போல் சிறப்பு சேர்த்துள்ளனர்.

குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகளில் அர்ஜூன் தாஸின் அப்பாக வரும் காளி வெங்கட் வெகுளியான பரிதாபத்திற்குரிய வகையிலான கதாபாத்திரம் கண் கலங்க வைத்துள்ளார் முதலாளியிடம் தனது மகனுக்காக கெஞ்சும்போது ரசிகர்களையும் அழ வைக்கிறார் அவரின் நடிப்பு அத்தனை உண்மையாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த மகன் – தந்தை காட்சிகளில் சிறப்பான காட்சியாக அநீதியைக் குறிப்பிடலாம்.

உணவு விநியோகம் செய்யும் இளைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள் சொத்துக்காக மட்டும் கவனிக்கப்படும் பெற்றோர் என்று திரைப்படத்தின் மூலம் பேசியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இறுதிக்காட்சிகளில் அர்ஜூன் தாஸ் ”கைகூப்பி நிற்கறவங்க மன்னிப்பை ஏத்துக்காதவன் மனுஷன் இல்லை மிருகம்” என சொல்லும் வசனம் நம் மனதின் அடி ஆழத்தைத் தொட்டுப்பார்க்கும்.

ரத்தம் தெறிக்கத் தெறிக்க இருக்கும் காட்சிகள் ஒவ்வொருவரின் மன அழுத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றது.

காட்சிகள் அனைத்தும் இறுக்கமாக காட்டியுள்ளது கேமராவின் கண்கள்.

மொத்தத்தில் அநீதிதை தோலுரித்துகாட்டும் அநீதி பேசப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *