• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு திருமணம்

ByA.Tamilselvan

Sep 5, 2022

இந்தியாவின் இளம் பெண் மேயரான கேரளாவை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம் மேயர் ஆவார்.
இவருக்கும் கோழிக்கோடு, பாலசேரி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவருக்கும் ஐந்து மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.சச்சின் தேவ் கேரள சட்டசபையில் இளம் வயது எம்எல்ஏ ஆவார். இவர்களுடைய திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி சென்டரில் நடைபெற்றது.இந்த திருமணத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண விழாவில் கேரள அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.