• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ப்ராங்க் வீடியோ எடுத்தால் யூடியூப் சேனல் முடக்கம்…

Byகாயத்ரி

Sep 5, 2022

கோவையில் ப்ராங்க் வீடியோ என மக்களுக்கு இடையூறு கொடுக்கும் யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதை மீறி வீடியோ வெளியிட்ட சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இளைஞர்கள் ப்ராங்க் வீடியோ செய்வது பிரச்சினைக்குரிய காரியமாக மாறியுள்ளது. முக்கியமாக கோயம்புத்தூர் பகுதியில் பல யூட்யூப் சேனல்கள் ப்ராங்க் என்ற பெயரில் மக்களை தொல்லைப்படுத்தி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளது. இதனால் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கோவை மாநகர காவல்துறை, கோவை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, சேனலும் முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி கோவை 360 என்ற சேனல் ப்ராங்க் வீடியோவை அப்லோட் செய்ததால் அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ப்ராங்க் வீடியோ எடுக்கும் சேனல்கள் மீது நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.