• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்திய பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் சிந்திக்கும் திறன் இல்லையா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

சர்வதேச சுற்றுலா பகுதியும், இந்தியாவின் தென் கோடி எல்லையுமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கும்–சுவாமி விவேகானந்தர் சிலை பாறைக்கும் இடையே ஆன கடல் பரப்பில் தூண்கள் அமைக்கும் பணி மற்றும் பிளாஸ்டிக் இளை பாலம் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் பாலம் பணியை ஆய்வு செய்தனர். பாலம் அமையும் தோற்றத்தின் வரை படங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.

திருவள்ளுவர் சிலை பாறையிலே செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது.

உலக பொதுமறை தந்த வான் புகழ் வள்ளுவருக்கு கன்னியாகுமரி கடல் பரப்பில் 133 அடி உயர சிலையை, அன்று தலைவர் கலைஞர் திறந்து வைத்தார். இன்று நமது முதல்வர் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கடல் பரப்பின் மீது ஒரு இணைப்பு பாலம் ரூ 37_கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டரை மாதத்தில் பணிகள் முழுமையும் நிறைவடைந்து சுற்றுலா மற்றும் பொது மக்களின் பயன் பாட்டிற்கு வரும் என தெரிவித்த அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதாவை இப்போது பிரதமர் மோடி பாராட்டி பேசுகிரார்,இதே பிரதமர் தான் இருவரது ஆட்சி ஊழல் ஆட்சி என்று அன்று பேசியது எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்து, பிரதமர் பங்கேற்ற கூட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலத்தில் இருந்து இறக்கு மதி செய்து பொதுக்கூட்டம் நடத்தியதை எல்லா பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு ரூ.1 ஜிஎஸ்டி கொடுக்கிறோம். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு திரும்ப தருவது 0.29 பைசா மட்டுமே.ஜிஎஸ்டி 2017_ல் தான் கொண்டு வரப்பட்டது. முன்பு நமக்கு வாட்,வரி விதிக்கும் உரிமை இருந்தது. இப்போது ஒன்றிய அரசு பிரித்துக் கொடுக்கும் நிதியை வாங்க வேண்டிய கட்டாயத்தில், தமிழகத்தை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்துகிறது. தமிழகத்திற்கு ரூ.1,_க்கு 0.29 திரும்ப தரும் நிலையில், உத்திரபிரதேச அரசுக்கு ரூ.1.00,செலுத்துவதற்கு திரும்ப கொடுக்கும் நிதி.ரூ.2.50. ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டேகளில் தமிழகத்திற்கு கொடுத்திருக்கும் ஜிஎஸ்டி பற்றி சிந்திக்கும் ஆற்றல் பிரதமருக்கும்,நிதி அமைச்சருக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

அவர்கள் இயக்கத்தில் போற்றி பேசும் அளவுக்கு தலைவர்கள் இல்லை கோட்சேவை பற்றி பேசினால் செவி படுக்க எவரும் இல்லை. மகாத்மா காந்தியை தேச விரோதி, கோட்சேவை தியாகி எனவும் பேசுகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து தமிழகம் பற்றிய பொய் செய்திகளை பரப்பி வருகிறது. இது குறித்து அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.