குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு. மீன் வலையால் ஆன மாலை அணிவிப்பது வரவேற்பு.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது .
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், அசோக் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தன், இராமனாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் அடையார் பாஸ்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கடலில் இறங்கி மத்திய பாஜக அரசை கண்டித்து இலங்கை அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்கள்.