• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு ..

ByA.Tamilselvan

Oct 21, 2022

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மீனவரை கடற்படையினரே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.