• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

எடப்பாடிபழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து இந்திய தேசிய லீக் கட்சி கடிதம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து கடிதத்தை வழங்கினர்!

Byதரணி

Jul 11, 2023

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் சந்தித்து பேசினார். அப்போது சிறுபான்மை மக்களுக்கு பாதிக்கக்கூடிய ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட இருக்கும் பொது சிவில் சட்டத்தை சிறுபான்மை மக்களுக்கு பாதிக்க கூடியது என்று பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமிக்கு அனைத்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற கடிதத்தை கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வழங்கினார். நிர்வாகிகள் முகம்மதுகாசிம் இப்ராகிம், மும்மதுஹான், முத்துவிலாசா, மாலிக்பாட்சா, காதர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் சந்தித்து பேசினார்.