தமிழக அரசின் மின்சார கட்டணத்தை குறைக்க கோரியும், அரிசி, பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட கோரியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம், திரளானோர் பங்கேற்பு.
மத்திய அரசு சமீபத்தில் அரிசி, பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு, மின்கட்டன உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முனிச்சாலை பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.