• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய ராணுவம் மிகப் பெரிய
அளவில் வளர்ச்சியடைந்துள்ளது
அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

இந்திய ராணுவம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப் பயணக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:- நாங்கள் எங்களது நண்பர்களை மாற்ற முடியும். ஆனால், அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அதனால் நாங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல நட்பு ரீதியிலான உறவினை கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும், அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பதுக்காக இந்தியா ஒருபோதும் அதன் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாது. நாட்டின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். மத்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டம் கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டது. சுயசார்பு இந்தியா திட்டத்தினால் இந்தியா உலக அளவில் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ராணுவமும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பிரதமர் மோடியின்
தலைமையிலான அரசு இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க கடினமாக உழைத்து வருகிறது. சிவகிரி மடத்தில் உள்ள துறவிகள் நாட்டின் ஆத்மாவை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த சேவையை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.