• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பருவநிலை மாற்றத்தால் : பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா

Byமதி

Oct 24, 2021

முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிக்கு ஆளாகும் நாடுகள் மதிப்பீடுகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 11 நாடுகளை அமெரிக்க உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு ஆளாகும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக அமெரிக்க தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக வெப்பமயமாதலை தீர்மானிப்பதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும். வெப்பமயமாதல் வெப்பநிலை, அதிக தீவிர வானிலை மற்றும் கடல் வடிவங்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று எச்சரிக்கிறது. இந்த 11 நாடுகளில் பலவற்றில் பரவும் நோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று அது எச்சரிக்கிறது.

கேரளா மற்றும் உத்தரகாண்டில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் பின்னணியில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் வெப்பமயமாதலை தடுக்க, இந்தியா புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு மாற நடவடிக்கை எடுப்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.