• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா.. இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்-பிரதமர் மோடி

Byகாயத்ரி

Sep 8, 2022

இன்று குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இந்த முன்னேற்றம் சாதாரணமானது இல்லை. இதனை அப்படியே விட்டுவிட கூடாது. இந்த உற்சாகத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும். மேலும் முன்னேற வேண்டும். இந்தியா தற்போது இங்கிலாந்தை முந்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர்மோடி இன்று மாலை டெல்லியில் உள்ள இந்திய நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலையை திறக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.