கோவையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தேர்தல்மன்னன் நூர்முகமது எனக்கு கொலை மிரட்டல் விடுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு கதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தார்.
ஆனால் இன்னமும் பாதுகாப்பு தரவில்லை என குமுறும் நூர் முகமது இது தொடர்பில் போலீஸாரும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.