• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேமுதிக வேட்பாளரை முந்திய சுயேட்சை வேட்பாளர்

ByA.Tamilselvan

Mar 2, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்ட்சை வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
பிப் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலைதொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, முதல்சுற்றில் காங்கிரஸ் – 8429, அதிமுக – 2873, நாம் தமிழர் – 526, தேமுதிக – 112 வாக்குகள் பெற்றுள்ளன.இந்த நிலையில், முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்ட்சை வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அதன்படி, முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளை பெற்ற நிலையில், சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா என்பவர் 178 வாக்குகள் பெற்றுள்ளார்.