புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் போதைப்பொருள் தடுப்பு தடுப்புக் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில் இன்று சமுதாய சீர்கேடு மிக அதிக அளவு நடைபெற்று வருகிறது போதையின் அடிப்படையிலேயே போதை பல்வேறு வகைகளில் உள்ளே வந்து கொண்டிருக்கிறது புகையிலை வடிவில் மதுவாக பொக்கை பல்வேறு வகையான வடிவில் போதைப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் பட்டி தொட்டி எல்லாம் கிடைக்கும் வகையில் கள்ளச் சந்தையில் போய்க் கொண்டிருக்கிறது அரசாங்கம் எவ்வளவுதான் தடுக்க முயற்சி செய்தாலும் ஏதோ ஒரு வகையில் உள்ளே வருகிறது.
இந்த சமுதாயத்தை மிகவும் மோசமாக சீரழித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட போதைப் பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது. அரசாங்கம் பள்ளி கல்லூரிகள் கோவில் இந்த மாதிரி இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்ய தடை விதித்திருந்தாலும் கடைகளிலும் புகையிலை பொருட்கள் புகையிலைப் பொருட்கள் என்றால் பீடி சிகரெட் இதையெல்லாம் விற்பனை செய்யக்கூடாது என்று எவ்வளவு தடை உத்தரவு போட்டாலும் அதையும் மீறி சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை ஒரு அவலம் ஏற்படுகிறது.
அடுத்த சமுதாயம், குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதனை செய்து கொண்டிருக்கிறார்கள் மாணவ மாணவிகள் ஆகிய நாம்தான் நன்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அந்த புகையிலை பொருட்கள் போதைப் பொருள்களுக்கு நாம் எப்போதும் அடிமையாகி விடக்கூடாது. அப்படி ஓர் நபருடைய பழக்கவழக்கம் இருந்தால் முற்றிலும் தவிர்க்க வேண்டும் அப்படி எங்காவது விற்பனை செய்தாலோ இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியரிடம் கூறலாம். நாங்கள் உடனடியாக மேல் அதிகாரிகளிடம் கூறி இங்கே அதை நாங்கள் தடை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வோம் எனவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அதனை தொடர்ந்து கூறுகையில் செல்போன் பயன்பாடு மிக அதிக அளவு உள்ளது இது இல்லாமையும் இக்காலத்தில் இருக்க முடியவில்லை. இறந்த போதும் நாம் செல்போனை தவறான முறையில் எடுத்துச் செல்லக்கூடாது இன்று அறிவியல் முன்னேற்றத்தில் அனைத்தும் நமக்கு தேவை தான் எதையும் ஒதுக்கி விட்டு நம் வாழக்கூடிய சூழல் இல்லை இருந்தாலும் மாணவ மாணவிகள் என்ன செய்ய வேண்டும்.
தேவையற்றதுக்கு செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசினார். அதனைத் தொடர்ந்து படிப்பு என்பது மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். பல்வேறு காலகட்டங்களில் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம் ஒரு மனிதனை வாழ்க்கையில் முன்னேற்றுவது படிப்பு மட்டும்தான் முன்னேற்றம். மேலும் அரசு பள்ளியில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தொடர்ந்து கல்வித் துறையும் வழங்கி வருவதாகவும் பெண்கள் தற்காப்பு என கராத்தே புதிதாக பயிற்சிகள் வழங்கப்பட்டு கூறினார்.
அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் 79வது சுதந்திர தின விழா நினைவாக 100 மாணவ மாணவிகளுக்கு பேனாவை வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான அறிவியல் ஆசிரியர் நீல சிவசங்கரி மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.