79வது சுதந்திர தின விழா அடப்பக்கார சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. சிவமலர் தலைமையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர் ப.ஸ்ரீவித்யா
சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா துணை ஆளுநர் B.அசோகன், ஆசிரியர் கழகத் தலைவர் VRM.தங்கராஜ், புதுகை புதல்வன் முன்னிலை வகித்தனர். முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ரெ.பால சுப்பிரமணியன், தங்கராஜ், மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், கலந்து கொண்டனர்.

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைப சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலூனையும் அமைதியை வெளிப்படுத்தும் புறாக்களை பறக்கவிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்க உள்ளார்.
மேலும் இதில் பல்வேறு துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 93 ஆயிரத்து 338 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறந்த முறையில் பணியாற்றிய பல்வேறு துறையை சேர்ந்த 321 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.