• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தீபாவளியையொட்டி தொடா்ந்து விடுமுறை வந்ததால் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.

இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். தனுஷ்கோடி மற்றும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லுகின்றனா்.

இதனால் நீண்ட நாள்களுக்குப் பின் ராமேசுவரத்தில் உள்ள தனியாா் விடுதிகள், உணவகங்கள், சிறுகடைகள், வணிக நிறுவனங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதே போன்று தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் கைபேசி மூலம் சுயப்படம் எடுத்துக் கொள்கின்றனா்.