• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப் போக வாய்ப்பு

Byவிஷா

May 2, 2025

வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி என்பது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப்போகலாம் என்கிறார்கள். அதாவது பொதுவாக ஜூலை 31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த ஜூலை 31ம் தேதி இந்த முறை தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே 1 மாதம் சென்றுவிட்டது. இனி மக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்தாலும் பல லட்சம் பேர் தாக்கல் செய்யாமல் போகலாம். இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கியமாக இந்த ஆண்டுக்கான கொள்கைகள் மற்றும் வரி சநபiஅநகள் ஏற்கனவே பட்ஜெட் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் கூட இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
31 ஜூலை 2025 – தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
31 அக்டோபர் 2025 – தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் அல்லது நிபுணர்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
30 நவம்பர் 2025 – தணிக்கை தேவைப்படும் மற்றும் TP (பரிமாற்ற விலை) விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
அரசின் தாமதம் காரணமாக மேற்கண்ட காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
வருமான வரி பக்கம் திறக்கப்படாமல் போன தாமதத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்று இன்னும் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது வருமான வரி பக்கத்தின் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது புதிய regime படிவ மாற்றங்கள், பழையregime மாற்றங்கள் ஆகிய மாற்றங்களை ஏற்கும் விதமாக வருமான வரி இ-ஃபைலிங் போர்டலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவோர் மட்டும் பயன்படுத்தும் வருமான வரி தளத்தின் மென்பொருள் கருவிகள் ( JSON/Java/Excel பதிப்புகள்) இன்னும் சோதனை நிலையில் உள்ளன. கடைசி கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. முன்பே நிரப்பப்பட்ட ரிட்டர்ன் டேட்டாவிற்கு ஏஐஎஸ் (வருடாந்திர தகவல் அறிக்கை) மற்றும் டிஐஎஸ் (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) டேட்டா ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருவதால் அவை முடிந்த பின்பே வருமான வரி பக்கம் திறக்கும் .
பொதுவாகஇ இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ஐடிஆர் தொடங்கும். ஏற்கனவே இந்த படிவம் திறந்து ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் ரிட்டர்ன் தொகை கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் ரிட்டர்ன் தொகை கிடைக்கும்.
ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் தொகை கிடைக்காமல் போகலாம்.