• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெயிலுகந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா…

ByM.maniraj

Oct 4, 2022

கழுகுமலை அருகே குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்த புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல். ஏ வுமான கடம்பூர் ராஜீ தலைமை வகித்து புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து குமரெட்டியாபுரத்தில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார். அழகப்பபுரத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், கோவில்பட்டி ஆவின் மில்க் தலைவர் தாமோதரன், அதிமுக கழுகுமலை நகர இளைஞரணி செயலாளரும், முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கருப்பசாமி, வானரமுட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், அரசு ஒப்பந்தக்காரர் குட்டி என்ற மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, மின்வாரிய காண்டிராக்டர் கருப்பசாமி, காளாம்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசராகவன், கிளை செயலாளர்கள் பாலமுருகன், சித்திரன், மாரியப்பன், சீனிவாசன், ராமானுஜம் கணேசன் மற்றும் வெயிலுகந்த புரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.