மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். குத்து விளக்கு ஏற்றி அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக அரசுக்கும் அலுவலர்களும் அனைத்து குழந்தைகளும் நன்றி தெரிவித்தனர் தமிழக அரசின் மகத்தான இந்த திட்டத்தினை அனைவரும் வாழ்த்தி பேசினர். விழாவில் துணை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி முருகன் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பெற்றோர்கள் பங்கு பெற்றனர் காலை உணவு திட்ட பொறுப்பாளர் சரண்யா நன்றி கூறினார் விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை சித்ரா, அருவகம், தமிழ்செல்வி, அகிலா, அம்பிகா ஆகியோர் செய்திருந்தனர்.