• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எந்த உலகத்தில் இருக்கிறார் ஊராட்சித் தலைவர்

ByI.Sekar

Mar 21, 2024

பட்டியல் இனத்தவர்களுக்கு வசிக்கும் பகுதியில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்த பொதுமக்களை, ஊராட்சி மன்ற தலைவி கணவரை வைத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக விஜயசாந்தி இருந்து வருகிறார்.

இங்கு பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதிகள், செய்து தர கோரிக்கை விடுத்த பொது மக்களிடம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ரத்தினம் இங்கு நான் ஊராட்சி மன்ற தலைவர் என மிரட்டுவதாக குற்றச்சாட்டுகளாக கிராமத்திலிருந்து எழுந்த வண்ணம் உள்ளது.

வேப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் 30 மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கோரிக்கை விடுத்ததால் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ரவுடி போல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.