• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில்..,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அர்த்தனாரி பாளையம், அங்கலக்குறிச்சி கைகாட்டி, குமரன் கட்டம் பகுதியில் அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வதுபிறந்தநாள் வாழ்த்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் சுந்தரம், கார்த்திகேயன் அப்புச்சாமி, வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிரகதீஷ், வணிகர் அணிச் செயலாளர் பூபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,