ஜலகண்டாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி.கம்பம் நடுவதில் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு வாரத்திற்கு முன்பு ஆளும் கட்சி திமுகவின் தூண்டுதலின் பேரில் ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றியுள்ளது.
இந்நிலையில் இன்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும். திமுக அரசை எதிர்த்தும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பஜாகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் 200 பேர் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகே கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயற்சித்த போது, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர்.
காவல் தடுப்பையும் மீறி பாஜகவினர் கொடிக்கம்பத்தை நட்பு கொடியை ஏற்றினர். இதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு அதிரடி படையுடன் வந்த சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பாஜகவின் கொடிக்கம்பத்தை அகற்றி, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.