கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுருளகோடு ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உடைப்பு சரி செய்யும் பணிகள் மற்றும் உல்லிமலை ஓடைக்கு அடிமடை போடும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்.

இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஆண்டுதோறும் இச்சமயங்களில் தான் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிர் நடவு செய்கின்றனர். இச்சமயங்களில் கால்வாய் அடிமடை பணிகள் நடைபெறுவதை மேற்கோள் காட்டி விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் மறுநாளே அடைக்கப்படுகின்றது.
தொடர்ந்து இதுபோல் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக மெத்தனப் போக்குடன் செயல்படும் பட்சத்தில் நீர்வளத்துறை மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.